திருச்சியில் இன்று முதல் வலம் வருகிறது காசநோய் கண்டுபிடிக்க எக்ஸ்ரே வாகனம்

திருச்சி மாவட்டத்தில் காசநோய் கண்டுபிடிப்பிதற்கான நடமாடும் எக்ஸ்ரே வாகனம் இன்று முதல் 3 நாட்கள் மாநகராட்சி, திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய இடங்களுக்கு செல்கிறது. இதில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் ஆகியோர் செல்வார்கள். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
