டயர் குடோனில் தீ விபத்து பல லட்சம் சேதம்

0
1

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலை மேம்பாலத்தின் சர்வீஸ் ரோடு பகுதியில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான ஷோரூமின் தரைத்தளத்தில்  அடியில் டயர் குடோன் இருந்தது. நேற்று அதிகாலை 5 மணியளவில் கடையில் இருந்து புகை வந்த்தையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் சென்றது. சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின்பு புகையை தடுத்தனர். இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டயர்கள், மற்றும் கருவிகள் நாசமாயின. டயர் கம்பெனியின் அருகே ஏராளமான குடிசை வீடுகளும், வணிக நிறுவனங்களும், டூவீலர் ஸ்டாண்டுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.