கேஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், ஆர்பாட்டம் செய்ய முடிவு

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கணேஷ் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் 2300க்கும் மேற்பட்ட காஸ் ஏஜென்சிகள் உள்ளன. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெலிவரி தொழிலாளர்களாக உள்ளனர்.

சிலிண்டர் டெலிவரி செய்ய ஆயில் நிறுவனங்கள் ஏஜென்சிகளுக்கு ரூ.24 கமிஷன் தருகின்றன. ஆனால் அந்த கமிஷனை ஏஜென்சிகள் எங்களுக்கு தருவதில்லை. சம்பளமும் சரியாக வழங்குவதில்லை. இதனால் மக்களிடமிருந்து நாங்கள் டிப்ஸ் வாங்கும் நிலையில் இருக்கிறோம்.

எங்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கமிஷன் தொகை வழங்க ஆயில் நிறுவன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து வாடிக்கையாளர்களிடமும், அதிகாரிகளிடமும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதை வலியுறுத்தி விரைவில் ஒரு நாள் வேலை நிறுத்தமும், ஆர்பாட்டமும் நடத்த உள்ளோம் என்றார்.
