திருச்சி ஜெனிதா ஆண்டோ வின் அடுத்த சாதனை ..!

0
1

உலக மாற்று திறனாளிகள் சதுரங்க போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற திருச்சி ஜெனிதா ஆண்டோ .

உலக சதுரங்க கழகத்தின் முதல் ஊன முற்றோருக்கான டீம் செஸ் போட்டி துருக்கியின் தலை நகரான அங்காராவில் இந்த மாதம்
8ம் தேதி முதல் 14 ம் தேதி வரை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

துருக்கி சதுரங்க கழகம் இந்த போட்டியை நடத்த உதவியது .
உலகின் மிகப்பெரிய கண்டங்களான 1 ஐரோப்பா, 2ஆசியா, 3 ஆப்பிரிக்கா 4 அமெரிக்கா மற்றும் 5 ரஷியா-துருக்கி இணைந்து ஒன்று என ஐந்து குழுக்கள் மோதின. சுமார் 26 நாடுகளில் இருந்து 30 மாற்று திறனாளி சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர்.

2

ஆசியா அணியில் இந்தியா, கசகஸ்தான், குர்கிஸ்தான், துர்க்கிமினிஸ்தான், ஈரான், வியட்நாம் ஆகிய 6 நாடுகளின் வீரர்கள் களமிறங்கினர்.

போட்டி ஆரம்ப நிலையில் ஈலோ புள்ளி முறையில் ஆசியா தர வரிசை பட்டியலில் கடைசி இடமான 5 ம் இடத்தையே பிடித்திருந்தது.

முதல் போர்டில் விளையாடுவது என்ற கேள்விக்கு 6 முறை உடல் ஊனமுற்றோருக்கான பெண்கள் சதுரங்க உலக சாம்பியன் தமிழ் நாட்டு வீராங்கனை ஜெனிதா ஆண்டோ சரியானவர் என தேர்வு செய்தனர்.

முதல் போர்டில் விளையாடுவது ஒரு சவாலான விஷயம். ஆயினும்
ஜெனிதா தளரவில்லை. தன்னை விட 400 புள்ளிகள் அதிகம் உள்ள 2 இண்டர்நேஷனல் மாஸ்டர் களை டிரா செய்தும், தன்னை விட 200 புள்ளிகள் அதிகம் உள்ள அமெரிக்க வீரரை வென்றும் தமிழகம் பெருமைப்பட ஆசியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைக்க உறு துணையாக இருந்தாள். மற்ற ஆசியா வீரர்களும் அருமையாக விளையாடினர் . ரவுண்டு ராபின் முறையில் இந்த போட்டிகள் நடந்தன . ஒவ்வொரு டீமும் மற்ற 4 கண்டத்தையும் எதிர் கொள்ளவேண்டும்.

இது 2020 ல் நடக்க உள்ள பார ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்டம் அல்லது ஒத்திகை என கருதப்படுகிறது.

இது ஜெனிதா ஆண்டோ வின் ஒரு மாபெரும் சாதனை ஆகும்.

3

Leave A Reply

Your email address will not be published.