189 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் கண்டித்து டிச.22ல் உண்ணாவிரதம் கொசு ஒழிப்பு களப்பணியாளர் சங்கம் அறிவிப்பு

திருவெறும்பூரில் கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் நல சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில செயலாளர் தயாளன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநகர பகுதி பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் ஊரகப் பகுதியில் ரூ.300 ஆக குறைத்து வழங்கியதோடு, மாவட்ட கொசு ஒழிப்பு களப்பணியாளர்களான 189 பேரை பணிநீக்கம் செய்ததால், தரவேண்டும் எனவும், இதை வலியுறுத்தி வரும் 22ம் தேதி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
