போனில் நூதனமாக பேசி வங்கி கணக்கில் பணம் அபேஸ்

துறையூர் அருகே வீரமச்சான்பட்டயை சேர்ந்தவர் பாப்பாத்தி (40), இவரது வங்கிக்கணக்கில ரூ.25 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் இவருக்கு வந்த செல்போன் அழைப்பில், தான் துறையூர் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாகவும், புதிதாக ஏடிஎம் கார்டு தர இருப்பதால், அதற்கு தங்களது உங்கள் பழைய ஏடிஎம் கார்டு விவரங்களையும்,செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணையும் கேட்டுள்ளார். விவரம் தராவிட்டால் பழைய ஏடிஎம் கார்டு ரத்தாகிவிடும் என கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு வந்த 5 ஓடிபி எண்ணையும் தெரிவித்ததால் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுகுறித்துகொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
