திருச்சி கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் சென்றது

தமிழக திருக்கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கோவை தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் டிசம்பர் 15 முதல் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்கோயிலை சேர்ந்த யானைகளுடன், கால்நடை மருத்துவ குழுவும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலிருந்து கிளம்பி சென்றது. 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் யானைகளுக்கு நடைபயிற்சி, பசுந்தீவனம், சத்தான உணவு, இயற்கை மருந்துகள் வழங்கப்படுகிறது.
