திருச்சியில் முந்தி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட கே.என்.நேரு !

0
full

திருச்சியில் முந்தி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட கே.என்.நேரு !

 

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டன. இதுபற்றி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திமுகவுடன் இணைந்துள்ள கூட்டணி கட்சிகளுக்கான மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினளுக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 10 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், மதிமுகவிற்கு ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 7 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 8 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர், 5 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், வி.சிக்கு 2 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

ukr

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் பட்டியல்

 

poster

உப்பிலியபுரம் (பொது பெண்) தீபா, உப்பிலியபுரம் மற்றும் துறையூர் (ஆ.தி.பெண்) தமயந்தி, துறையூர் (பொது) ராஜேந்திரன், தாத்தையங்கார்பேட்டை (பொது) கிருஷ்ணமூர்த்தி, தொட்டியம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை (பொது) சுந்தரராஜன், தொட்டியம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை (பொது) காங்கிரஸ், முசிறி (பொது பெண்) கிருத்திகா, மண்ணச்சநல்லூர் (பொது) அசோக்ராஜா, புள்ளம்பட்டி (பொது பெண்) ஜெயலெட்சுமி, புள்ளம்பாடி (பொது பெண்) பாலவினோதினி, மண்ணச்சநல்லூர் (பொது பெண்) காங்கிரஸ், முசிறி மற்றும் மண்ணச்சநல்லூர் (பொது பெண்) வளர்மதி, அந்தநல்லூர் (ஆ.தி.பொது) கண்ணன், லால்குடி (ஆ.தி.பெண்) தீபா, லால்குடி(ஆ.தி.பெண்) ஆதிநாயகி, திருவெறும்பூர் (பொது) கருணாநிதி, திருவெறும்பூர் மற்றும் மணிகண்டம் (பொது பெண்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அந்தநல்லூர் மற்றும் மணிகண்டம் (பொது பெண்) பாக்கியலட்சுமி, மணிகண்டம் மற்றும் மணப்பாறை(பொது) சரவணன், மணப்பாறை மற்றும் வையம்பட்டி (பொது) இளங்கோ, வையம்பட்டி(பொது பெண்) தேக்கமலை, மணப்பாறை (பொது) பாலசுப்பிரமணி, மருங்காபுரி (ஆ.தி.பொது) சிவக்குமார், மருங்காபுரி (பொது) பழனிச்சாமி.

half 1

Leave A Reply

Your email address will not be published.