சம்பளம் இல்லை, சலுகையும் இல்லை டிப்ஸ் (பிச்சை) வாங்குவது தவறா? ஆயில் நிறுவனங்களுக்கு கண்டனம்

0
full

கேஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க அறிவிப்பு வெளியிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ukr

இதுகுறித்தான அறிக்கைவீடுகளுக்கு வழங்கப்படும் பில்லுக்குரிய பணத்தை மட்டும் கொடுங்கள் என ஐஓசி அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம், பிஎப், இஎஸ்ஐ, பென்சன் ஆகிய சலுகைகள் வழங்குவதில்லை. இதனால் பிச்சை (டிப்ஸ்) வாங்கிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறோம்.

நாளொன்றுக்கு 3 டன் வரை சிலிண்டர்களை சுமந்து வருடத்தின் எல்லா நாளிலும் வேலை செய்கிறோம். எங்களுக்கு வார விடுமுறையே கிடையாது. மேலும் வாடிக்கையாளர் தரும் டிப்சை வைத்துத்தான் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல், வாகன பழுது செய்கிறோம்.  இவர்களுக்கு தொழிலாளர்களின் சிரமம் எங்கே தெரியும் என கூறப்பட்டுள்ளது.

half 1

Leave A Reply

Your email address will not be published.