சபரிமலை அன்னதானத்துக்கு உணவுப்பொருட்கள் அனுப்பிவைப்பு

0
D1

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் கார்த்திகை முதல்தேதி முதல் தொடர்ந்து 65 நாட்களுக்கு அன்னதானம் நடந்து வருகிறது. இதில் திருச்சி மாவட்டம் சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15 முதல் 20ம்தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் அன்னதானம் 22 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் அன்னதானம் செய்ய சுமார் 23 டன் எடையுள்ள மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் 2 லாரிகளில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள அகில பாரத ஐயப்பசேவா சங்கம் சபரிமலை சிறப்பு முகாமில் இருந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

N2

இந்த உணவுபொருட்கள் திருச்சி, பெரம்பலூர் பகுதியை சேர்ந்த 105 கிளைகள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.அன்னதான பொருட்களை மாவட்ட தலைவர் ரமேஷ் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

N3

Leave A Reply

Your email address will not be published.