உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற மாஜி படைவீரர்களுக்கு அழைப்பு

வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், வார்னர்ஸ்ரோடு, கண்டோன்மென்ட், திருச்சி என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு 0431/2410579 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
