பிளாஸ்டிக் தடுக்காத அதிகாரியை தூக்கியடித்தார் கமிஷனர்

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மத்திய பஸ்நிலையத்தில் அதிரடியாக ஆய்வுமேற்கொண்டார். அங்கு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் அருகே டீக்கடையில் ஆய்வுமேற்கொண்டார். அங்கே பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதை அறிந்து அவற்றை பறிமுதல்செய்து இனிமேல் பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.

அதோடு அங்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காத அதிகாரி மோகன்ராஜுக்கு ரூ.500 அபராதம் விதித்து, அவரை வேறுகோட்டத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.
