திருச்சியில் தாசில்தார்கள் டிரான்ஸ்பர்

0
full

திருச்சி மாவட்ட வருவாய்த் துறையில் பணியாற்றிய நான்கு தாசில்தார்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.

ukr

விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை வழி அகல ரயில்பாதை யூனிட் 2 நிலமெடுப்பு தனி தாசில்தார் சித்ரா, ஸ்ரீரங்கம் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், அப்பொறுப்பில் இருந்து சுப்பிரமணியன் திருச்சி கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மணப்பாறை டிஎன்பிஎல் யூனிட் 4 நிலமெடுப்பு தனி தாசில்தார் சண்முகப்பிரியா, விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை வழி அகல ரயில்பாதை யூனிட் 2 நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், விடுப்பில் இருந்து லால்குடி முன்னாள் தாசில்தார் சத்திய பாலகங்காதரன், ஸ்ரீரங்கம் தாலுக்கா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சிவராசு பிறப்பித்துள்ளார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.