உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வெற்றி பிரகாசம் சொல்கிறார் நேரு

திமுக தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எட்டப்பட்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்களைப்பொறுத்தவரை அதிகாரிகளும், போலீசாரும் சரியாக இருப்பார்கள் என நம்புகிறோம்.வென்றவர்களை வென்றவர்கள் என கூறினால் போதும். சில ஊர்களில் பதவிகள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வருகிறது. இவற்றை தடுக்கவேண்டும்.

திருச்சி மேயர் பதவி 1996 மக்கள்தொகை கணக்கீடு படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 20011ன் படி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசு பிரமாண தாக்கல்செய்துள்ளது. இதை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றம் சென்றது. இதன்படி அதிமுக அரசு கோர்ட் அவமதிப்பு பிரசனையை எதிர்கொள்ளும். திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.
