திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் விபசாரம்: பெண் கைது

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக வந்த தகவலின்பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. அப்பெண் விபசார தடுப்பு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் அங்கிருந்து ஒருபெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
