திருச்சியில் மகாகவி பாரதியார் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா.

0
Full Page

திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் மகாகவி பாராதியார் 137வது பிறந்ததின சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்டம், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் தலைமை உரையாற்றினார்.தேசியக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மாணிக்கம் சிறப்புரையில், சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882 பிறந்தார். கவிஞர்,எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் என்றார்.

Half page

முன்னதாக அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் வரவேற்க,ராக்போர்ட் அஞ்சல்தலை ஆராய்ச்சி மைய நிறுவனர் ஷர்மா நன்றியுரையாற்றினார்.

அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி ,லால்குடி விஜயகுமார் ,மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார் , நாசர், தாமோதரன், ராஜேந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.