என் முதல் ஓட்டம் -கவிசெல்வா

0
gif 1

கவிஞர் கவிசெல்வா காவல்துறையின் ஓட்டம்

gif 4

அரியலூர் மாவட்டம் கீழமைக்கேல் பட்டியில் பிறந்த எனக்கு 1997 ல்
அன்றுதான் என் ஓட்டம் ஆரம்பமானது ..
தமிழில் B.lit முடித்தாலும் ..
அவ்வளவு சீக்கிரம் பணிக்கிடைக்கவில்லை
பசி பாடாய் படுத்தியது
மூன்று வேளை சாப்பிட
ஒரு வேலை வேண்டும்
ஓடினேன்….. ஓடினேன்
ஓடி…..பழக கிராமத்தில்
தனியிடம் ஒன்றும் இல்லை ……..
ஆறு, ஏரி, குளம் இவைத்தவிர …..
வயல் வெளிகள்தான் அதிகம் ……
வண்டிமாட்டு தடங்கல் இருக்கும்
வயலில் இறங்கி ஓடிப்பழகினேன்
காலில் செருப்பு இல்லை
முள் குத்தாத இடமில்லை
ஆனாலும் மனம் தளரவில்லை
அன்றுதான் உடற்கூறு தேர்வு ..
திருச்சியில் நடந்தது வழி செலவுக்கு கடனாக டாக்டர் மாசிலாமணி அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்
கிராமத்தில் இருந்து …
நகரம் நோக்கி என் பயணம் ஆயுதப்படை
மைதானத்தில் அமர்ந்திருந்தேன் ..
என்னோடு ஓட தயாராக இருந்த…
என் சகா தோழிகள் ..
என் உடைபார்த்து சிரித்தார்கள் ……
மைதானத்தில் பாவாடை தாவணியில் ..
ஓட அமர்ந்திருந்தது ………
நான் மட்டும் தான் …….
பேண்ட் ,ஷர்ட் சுடி போட்டு இருந்தார்கள்…
நான் அவர்களை வினோதமாக பார்க்க …….
அவர்கள் என்னை கிண்டல் செய்தார்கள் ……
பாவம் வசதியாக வாழ்ந்த பிள்ளைகள் ….
வெயில் தாங்காமல் தவித்தார்கள் ..
எனக்கு ஒன்றும் தெரியவில்லை …
வெயிலின் உற்பத்திப் பொருள் நான்…
முகத்தில் என் பல்லைத் தவிர ..
ஒரு இடமும் சிவப்பாக இல்லை ..
கிராமத்தில் மாமன் முறைக்காரர்கள் ..
என்னை கருவண்டு என்றே ..
செல்லமாக அழைப்பார்கள்..
என்னுடன் யாரும்..
வழித்துணைக்கு வரவில்லை ..
என் பக்கத்தில் இருந்தவர்கள் …
விதவிதமாக உணவு உண்டார்கள் ..
பசி …….படுத்தியது
வழிச்செலவுக்கு ……..
கொண்டுவந்ததே 100 ரூபாய்தான் …
பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் …
நிலைமை பார்த்து சிரித்தேன் .
நான் தாகம் எடுத்தால் …
குளத்து நீரை ஒரு கை …
அள்ளி குடித்துவிடுவேன் …
குட்டையில் மாடுகளோடு ..
நானும் குளித்திருக்கிறேன் …
மாடு குளித்த தண்ணீரை …..
குடித்து வளர்ந்தவள் நான்…
தண்ணீர் கேட்க நினைத்த என் மனம் …
கவுரவவேடம் பூண்டது ……
விசில் அடித்து ஓட அழைத்தார்கள் ……
வரிசையில் நின்றோம் …….
பாவாடையை கோதி ……
ஒருபக்கமாக சொருகி ஓட தயாரானேன் ……
ஒரு வயதான காவலர்மட்டும் …..
என் பக்கத்தில் வந்து ……
அம்மாடி பாவாடை தடுக்காம
ஓடு தாயி என்றார் ……
அவர் கிராமத்து வாசம் …
பேச்சில் உணர்ந்தேன் …
ஓடினேன் முதல் நபராக வெற்றி …
அடுத்தநாள் காலையில் அப்பா ..
என் தூக்கத்தில் எழுப்பினார்….
கண்ணு உன் போட்டோ ……
பேப்பர்ல வந்துருக்கு என்று……
டீ கடையில் ஓசி வாங்கி வந்த……
பேப்பரை காட்டி சிரித்தார் ……
பேப்பரை வாங்கி முத்தமிட்டேன் …..
அன்று முழுதும் என்கிரமத்தில்
என்னைபற்றியே பேச்சி ….
ஒருநாள் கீரோயின் ஆனேன்
இது காவல் துறையில் ……
நான் ஓடிய முதல் ஓட்டம் ……
மறக்க முடியாத நினைவாய் இன்றும்

gif 2

Leave A Reply

Your email address will not be published.