உள்ளாட்சிக்கு மட்டுமல்ல, சட்டசபை தேர்தலுக்கும் தயாரான நேரு

0
Business trichy

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு மாஜி அமைச்சர் நேரு தயாராகி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். எப்படியென்றால் கடந்த சட்டசபை மற்றும் எம்பி தேர்தலிலும் நாடார், ரெட்டியார் உள்ளிட்ட சாதி சங்கங்கள், வணிகர் அமைப்புகள், மகளிர்சுயஉதவி குழுக்கள் என பலவேறு அமைப்பு மற்றும் சங்கங்களின் ஆதரவை நாடி தேர்தலில் வெற்றி கண்டார்.

web designer

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு மேற்படி அமைப்புகளிடம் ஆதரவு கோரவேண்டிய அவசியம் இல்லாதபோது வலிந்துசென்று திமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு வருகிறார். அதோடு முக்கிய நபர்களை நேரில் சென்று சந்திப்பதாகவும் தெரிகிறது. இதிலிருந்து அண்ணன் நேரு உள்ளாட்சி மட்டுமல்ல, சட்டசபை தேர்தலுக்கும் தயாராகிறார் என சொல்கின்றனர் உடன்பிறப்புகள்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.