அரியமங்கலம் பகுதியில் சிறுவன் கொலை அதிமுக பிரமுகரின் மறைமுக நெருக்கடி

திருச்சி அரியமங்கலம் பகுதியில் மேல அம்பிகாபுரம் அப்துல்வாஹித், வயது 12. இவர் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து பழைய இரும்புகளை சேகரித்து விற்பனை செய்துள்ளார்.

கடந்த 3ம் தேதி இரவு 7 மணி கடைக்குசெல்வதாக கூறிவிட்டு சென்ற அப்துல்வாஹீத் வீடு திரும்பவில்லை.போலீசார் விசாரணையில் சம்பவத்தன்று 4 சிறுவர்களுடன் அப்துல்வாஹீத் சென்றது தெரியவந்தது.மேலும் அவர்கள் அப்துல்வாஹீத்தை கொன்று மாநகராட்சி குப்பை கிடங்கில் உள்ள தண்ணீர்தொட்டியில் போட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அப்துல்வாஹீத் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் ஒரு சிறுவன் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் என்பதும், அரசியல் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
