திருச்சியில் 140 பேர் வேட்பு மனு: களைகட்டும் உள்ளாட்சி தேர்தல் !

0
D1

10 டிசம்பர் 2019 திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று (9ம் தேதி) 140 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

 

N2

முதல் நாளான நேற்று காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனு தாக்கல் பெற்றனர். இதில் மாவட்ட, ஒன்றிய, கவுன்சிலர் பதவிகளுக்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஊராட்சி தலைவர் பதவிக்கு மணிகண்டம், புள்ளம்பாடி ஒன்றியங்களில் தலா 2 பேரும், மருங்காபுரி ஒன்றியத்தில் 3 பேரும், லால்குடி, தொட்டியம் ஒன்றியங்களில் தலா ஒருவரும், துறையூர் ஒன்றியத்தில் 4பேரும் என 13பேர் மனுதாக்கல் செய்தனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 127பேர் மனுதாக்கல் செய்தனர்.மருங்காபுரி வார்டு ஒன்றியத்தில் 20பேர் வார்டு உறுப்பினர்களுக்கு மனு செய்தனர்.முதல் நாளான 140பேர் மட்டும் மனுதாக்கல் செய்தனர். 11ம் தேதி (புதன்கிழமை) முதல் வேட்புமனுதாக்கல் சூடுபிடிக்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

D2

 

வேட்புமனு படிவங்கள்பெற வந்த சிலரிடமும், ஊராட்சி ஒன்றிய பணியில் உள்ள அலுவலர்களிடமும் பேசுகையில், கடந்த 2016 போன்று இப்போதும் தேர்தல் நடக்குமா என நம்பிக்கையில்லாமல் தான் உள்ளனர். எனினும் உள்ளாட்சி அலுவலகங்களில் தேர்தல் திருவிழா உற்சாகத்துடன்தான் உள்ளது.

N3

Leave A Reply

Your email address will not be published.