திருச்சியில் பூட்டிய வீட்டு சுவற்றில் வட்டக்குறி கொள்ளையர்களின் சிக்னலா? கைவரிசையா?

துறையூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முகமது ரபீக், வக்கீல். இவரது வீடு நேற்று மதியம் (9ம் தேதி) பூட்டப்பட்டிருந்து. மதியத்துக்கு மேல் அழிக்கமுடியாதவாறு வெளிச்சுவற்றில் வட்டக்குறி போடப்பட்டிருந்தது. இதேபோல் அருகே வசிக்கும் சேகர் என்பவரின் வீட்டு சுவற்றிலும் வட்டக்குறி இடப்பட்டு இருந்தது. இதுகுறித்து முகமதுரபீக் கொடுத்த புகாரின்பேரில் முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் உட்பட போலீசார் விசாரித்து வருகின்றனர்.
