திருட்டு நகையில் கொள்ளை அடித்ததா போலீஸ்… 7 நாள் கஸ்ட்டடியில் முருகன் கூறிய ‘திடுக்’ வாக்குமூலம்

0
Full Page

தன்னிடம் பொட்டு நகைகூட இல்லை. தமிழகத்தை விட்டு கர்நாடக சிறையில் சரண்டர் ஆனதற்கு காரணம் அங்கே ராஜமரியாதை கிடைப்பதுதான். 1995ம் ஆண்டு முதல் கொள்ளையடித்து வருகிறேன்.

போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல சினிமாக்கள் பார்த்து வழிமுறைகளை தெரிந்துகொண்டேன். பழைய கொள்ளைகளில் சம்பாதித்த காசைகொண்டு சினிமா படம் எடுத்து நஷ்டமும் அடைந்தேன்.

திருச்சி லலிதாவில் கொள்ளையடித்த நகைகளை மதுரையில் கணேசன் வீட்டில் வைத்து பங்குபிரித்துவிட்டு ஆளுக்கொரு திசைக்கு சென்றுவிட்டோம்.

நாங்கள் கொள்ளையடித்த எல்லா நகைகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். ஆனால் கொள்ளையடித்த நகையில் எங்களிடமே போலீசார் கணக்கை குறைவாக காட்டுகின்றனர்.

விசாரணையின் முடிவில் திருட்டுதொழிலை விட்டுவிடுவதாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முருகன் வழக்கறிஞர்கள் கூறுகையில், முருகன் விசாரணையின்போது துன்புறுத்தல் ஏதும் செய்யப்படவில்லை. முருகனிடம் இருந்து 93.5 சதவிகித நகைகள் மீட்கப்பட்டுவிட்டன. முருகனை ஜாமினில் எடுக்க முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

போலீசார் கூறுகையில்இகொள்ளை போன 28 கிலோ நகையில் இதுவரை 24.550 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற நகைகள் குறித்து விசாரணை நடத்துகின்றோம் என்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.