திருச்சியில் 4077 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் விறுவிறு ஆரம்பம் – விரிவான அலசல்

0
full

திருச்சியில் 4077 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் விறுவிறு ஆரம்பம் – விரிவான அலசல்

 

 

திருச்சி  மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்து 77 உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் 09.12.2019 இன்று ஆரம்பம். திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 27ம் தேதி அந்தநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, திருவெரும்பூர், வையம்பட்டி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2ம் கட்டமாக 30ம் தேதி லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கர் பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம்,  ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

 

இதற்கான வேட்புமனுத்தாக்கல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் , ஊராட்சி அலுவலகங்களில் இன்று 09.12.2019 தொடங்குகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவி, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதற்கான தேர்ல் அலுவலகர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

poster

திருச்சி மாவட்ட 14 ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகள்

கிராம ஊராட்சி தலைவர் 404

மாவட்ட கவுன்சிலர்கள் – 24

ஊராட்சி ஓன்றிய கவுன்சிலர்கள் – 241

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் – 3408

மொத்த பதவிகள் – 4077

ukr

மொத்த வாக்காளர்கள்

14 ஒன்றியங்களில் மொத்த வாக்காளர்கள்

ஆண்கள் – 5,96,962

பெண்கள் – 6,23,993

 

மொத்தம் – 12,21,017

 

half 1

Leave A Reply

Your email address will not be published.