திருச்சியில் மாயமான 9 பெண்கள் ? யார் சொல்வது உண்மை….

0
gif 1
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மேய்ப்பர் ஜெபக்கூடம் மற்றும் மோசே மினிஸ்ட்ரி குழந்தைகள் பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழை பெண் குழந்தைகள், இளம்பெண்கள் படித்து வருகின்றனர். இங்கு திடீரென ஒன்பது இளம்பெண்கள் தலைமறைவானது பெரிய விவகாரமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரி தமிமுனிஷா கூறுகையில், காப்பக பெண்கள் ஒன்பது பேரையும் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்போவதாக முதல்நாளே கூறியிருந்தோம். காலையில் சென்று பார்க்கும்போது ஒன்பதுபெண்களும் எங்களிடம் முறையான தகவல் கொடுக்காமல் விமானம் மூலம் சென்னை சென்றுள்ளனர். உங்களின் நடவடிக்கைக்கு உட்படமாட்டோம். நீதிமன்றத்தில் வழக்குதொடரவோம் என வழக்கறிஞர் மூலம் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். எனவே நாங்கள் காவல்துறை மூலம் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்றார்.
இதுகுறித்து தலைமறைவான பெண்கள் சார்பாக ஆதரவாக இருக்கும் வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் கூறுகையில், இப்பெண்கள் சமூக நலத்துறை அதிகாரியிடம் அனுமதிபெற்ற பிறகே, சர்ச் கமிட்டி கொடுத்த பணத்துடன் சென்னை சென்றனர். காப்பகம் மாற்றுவதற்கு  எதற்காக காவல்துறையினரை அழைத்துசெல்லவேண்டும். இவர்கள் என்ன குற்றவாளிகளா? இளமபெண்களில் இருவருக்கு பெற்றோர் உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு  மற்ற ஏழு பெண்கள் சென்றுள்ளனர் என்றார்.
gif 3
gif 4
கடந்த காலங்களில் கசப்பை மட்டுமே பெற்ற இப்பெண்கள் விஷயத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
காப்பக  இளம்பெண்களை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அழைத்துசென்று மதம் மாற்றம் செய்வதாக உள்ள பழைய வழக்கில் நிர்வாகி கிதியோன் ஜேக்கப் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
gif 2

Leave A Reply

Your email address will not be published.