திருச்சி ஆசிரியைக்கு மனஉளைச்சல் தந்த ஆட்டோ டிரைவர் கைது !

திருச்சி ஆசிரியைக்கு மனஉளைச்சல் தந்த ஆட்டோ டிரைவர் கைது !

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்தவர் டீச்சர். இவர் பள்ளி ஆசிரியர். நேற்று முந்தினம் 04.12.2019 அன்று பள்ளி முடித்து விட்டு மாணவர்களின் தேர்வு தாள் உள்ளிட்டவைகளுடன் ஜங்சன் அருகே இருந்து ஓலா ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு சென்றார். ஆட்டோவை ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் பகுதியை சேர்ந்த பத்மநாபம் என்பர் ஓட்டியுள்ளார்.

அதில் டிரைவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோவில் செல்லும் போது டிரைவர் ஆசிரியையிடம் அடிக்கடி பேசிக்கொண்டே வந்துள்ளார். இதில் அவரின் நடவடிக்கை பிடிக்காத ஆசிரியை ஆட்டோவை நிறுத்தும் படி கூறியுள்ளார். அப்போது ஆட்டோவை வேகமாக ஓட்டி நிறுத்தியதால் மாணவர்களின் தேர்வு தாள் கீழே விழுந்து சகதியாகி உள்ளது. இதனால் மன உளைச்சல் மற்றும் வேதனை அடைந்த ஆசிரியர் இது குறித்து கன்டோன்மெண்ட் போலிசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ. சுலோச்சனா, ஆட்டோ டிரைவர் பத்மநாபனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
