திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
Full Page

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Half page

திருச்சி மாவட்டம் முசிறியில் நேற்று டிச-05 முசிறி உட்கோட்ட காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர், இதில் முசிறி உட்கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமைதாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் மற்றும் துறையூர், தொட்டியம், முசிறி வட்ட காவல் ஆய்வாளர்கள் பங்குபெற்றனர். மேலும் முசிறி வட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர் அவர்களுக்கு காவல்துறையின் உதவியை எவ்வாறு பெறுவது குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.