திருச்சியில் கால்நடை மருத்துவராக பணிபுரிய அழைப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஜி கார்னர் மற்றும் காந்தி சந்தை ஆகிய பகுதிகளிலுள்ள ஆடு மற்றும் மாடு வதைக் கூடங்களில் ஆடு மற்றும் மாடுகளின் உடல்நலனை பரிசோதனை செய்யும் பணிக்கு, கால்நடை மருத்துவராக பணி செய்ய விருப்பமுள்ள கால்நடை மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான கால்நடை மருத்துவர் அளிக்கும் விண்ணப்பங்களில் மாதம் ஒன்றுக்கு எதிர்பார்க்கப்படும் ஊதியம், சுய விவரம், ஏற்கனவே இதுதொடர்பாக பணியாற்றி அனுபவம் இருப்பின் அவ்விவரம் மற்றும் தகுதிகள் ஆகியவைகளை குறிப்பிட்டு ஆணையர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி என்ற முகவரிக்கு 18.12.2019 மாலை 5.00 மணிக்குள் பதிவஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்.

18.12.2019 க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
