எம்.பி. திருச்சி சிவாவுக்கு விருது !

0
Business trichy

ராஜ்ய சபா எம்.பி. திருச்சி சிவா 2019ம் ஆண்டுக்கான சிறந்த பார்லிமென்டேரியன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லோக்மட் மீடியா குழு சார்பில் ஆண்டு தோறும் சிறந்த பார்லிமென்டேரியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையிலான தேர்வு குழுவினர் திருச்சி சிவாவை இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளது.

 

web designer

வரும் 10ம் தேதி புதுடில்லியில் நடைபெற உள்ள விழாவில் திருச்சி சிவாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு விருதினை வழங்க உள்ளார். இதற்கு முன்பு இந்த விருது சரத்பவார், அருண் ஜெட்லி, சரத் யாதவ் சீதாராம்யெச்சூரி, குலாம்நபி ஆசாத் இந்த விருது பெற்ற தலைவர்கள் ஆவார்கள்.

loan point

தி.மு.க.வில் மிகச்சிறந்த பேச்சாளராகவும், மாநிலங்களவையில் மாநில உரிமைகள் குறித்து தொடர்ந்து குரலெழுப்புபவராகவும் இருந்துவரும் எம்.பி. திருச்சி சிவா, இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவதை அறிந்து, தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.