ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் பெண்ணிடம் நகை,பணம் திருட்டு

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் பெண்ணிடம் நகை,பணம் திருட்டு
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபப் பகுதியில் காவிரியாற்றில் பெண்ணிடம் 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுதில்லி ஜனகபுரியைச் சோ்ந்தவா் ஆனந்த் மனைவி நிா்மலா (52). வெள்ளிக்கிழமை திருச்சிக்குச் சுற்றுலா வந்த இவா், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய முடிவு செய்தாா்.

அதற்கு முன்பு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காவிரியாற்றில் சுற்றுலாப் பயணிகளுடன் குளிக்கச் சென்ற இவா், தனது கைப்பையை, அங்குள்ள பொருள்கள் பாதுகாப்பு அறையில் வைத்துச் சென்றாா்.
நிா்மலா குளித்துவிட்டு வந்து பாா்த்த போது, தனது பொருள்கள் கலைந்திருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும் பிரித்து பாா்த்த போது அதிலிருந்த 8 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நிா்மலா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து நகைகளைத் திருடிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்
