விருப்பமனு செய்ததில் விறுவிறு அமமுகவினர்

விருப்பமனு செய்ததில் விறுவிறு! அமமுகவினர்!
“தமிழகம் தலை நிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்” அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உள்ளாட்சி மன்றத் தேர்தல் – 2019 விண்ணப்பதாரரின் விருப்ப மனுவில் இடம்பெற்றுள்ள வாசகம் இதுதான். விண்ணப்ப விருப்ப மனுவில் 19 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பெயர், தந்தை/ கணவர் பெயர், வயது, பிறந்த தேதி, கல்வித்தகுதி, நிரந்தர முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண், மாநகராட்சி /நகராட்சி/ பேரூராட்சி வார்டு எண், பதவிக்கான இட ஒதுக்கீட்டை தேர்வுசெய்ய இடங்கள் உள்ளன.
மதம், தாங்கள் சார்ந்த சமூகம் மற்றும் உட்பிரிவு , போட்டியிட விரும்பும் பகுதியில் தங்களது சொந்த ஊர், வார்டு உள்ளதா? கழகத்தில் தற்போது வகிக்கின்ற பொறுப்பு, தாங்கள் ஏற்கனவே வகித்த அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பதவிகள், தாங்கள் போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த விவரங்கள், தங்கள் மீது காவல் நிலையத்தில் ஏதேனும் புகார் பதியப்பட்டுள்ளதா?


ஆம் எனில் அதன் விவரம், நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா?ஆம் எனில் அதன் விவரமும், வழக்குகளில் தண்டனை பெற்று இருப்பின் அதன் விவரங்களையும் குறிப்பிடுக என விருப்பமனுவில் அச்சிடப்பட்டு மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியானவை என உறுதி அளிக்கின்றேன் என விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு மனுவை வழங்கியுள்ளார்கள். அத்துடன் புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை நகல், சாதி சான்றிதழ் நகல், இணைக்க கூறியுள்ளார்கள் திருச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி யின் 65 வார்டுகள் இடம்பெற்றுள்ள மாநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு வார்டுக்கு ஆறு முதல் ஏழு நபர்கள் வரை மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன், அமைப்பு செயலர் சாருபாலா தொண்டைமான், கதிரவன் உள்ளிட்டோரிடம் விண்ணப்பித்து உள்ளார்கள்.

மாநகர் ,பகுதி, சார்பு அணி நிர்வாகிகள் 356 பேர்கள் விருப்பமனு செய்துள்ளார்கள். 211 ஆண்கள், 145 பெண்கள் இதில் அடங்குவார்கள். திருச்சி 48 வது வார்டில் 12 நபர்கள் விருப்ப மனு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
65 வார்டுக்கு 356 நபர்கள் விருப்ப மனு செய்துள்ளதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இடையே போட்டிகள் நிலவுகின்றது.
