திருச்சியில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை விசாரணை வலைக்குள் 2 ஆசாமிகள்

0
D1

திருச்சியில் தேசிய புலனாய்வு துறையினர் ஆய்வு
விசாரணை வலைக்குள் 2 ஆசாமிகள்

கடந்த அக்டோபர் மாதம் திருச்சி அருகே உள்ள இனாம் குளத்தூரில் சாகுல் என்ற வாலிபர் வீட்டில் என்.ஐ. ஏ தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மூன்று பேர் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

D2

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கேஆர்எஸ் நகரில் வசித்து வரும் சர்புதீன் என்பவர் அவ்வப்போது அரபு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வந்தார். இவர் தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா அமைப்பின் முகநூல் கணக்கில் இணைந்து அல்கொய்தா அமைப்பினர் வெளியிடும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதும், ஆவணங்களை டவுன்லோட் செய்வது மற்றும் லைக் செய்து வந்ததாக தெரிகிறது.

N2

இதுதொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தேசிய புலனாய்வு அமைப்பினர் சர்புதீன் முகநூல் கணக்கை கண்காணித்துவந்ததுடன் இன்றையதினம் நவ- 30 தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் கேரள டிஎஸ்பி ஜார்ஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் திருச்சி மாநகர போலீசார் துணையுடன் இன்று கேஆர்எஸ் நகரில் உள்ள சர்புதீன் வீட்டிற்கு 5 மணியளவில் வந்த என்ஜஏ அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டதுடன், குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இந்த சோதனையின் அடிப்படையில் சர்புதீன் மச்சான் ஜாபரும் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது. வீட்டிலிருந்து செல்போன், பென் ட்ரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றியதுடன், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவரையும் விசாரணைக்காக கேரளா அழைத்து சென்றனர்.

மேலும் இதனை தொடர்ந்து தஞ்சையிலும் மற்றோரு குழு தேசிய புலனாய்வு துறையினர் ஒரு் வீட்டில் ரெய்டு செய்துக்கொண்டிருக்கின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.