திருச்சியில் இரண்டு ஆம்னி பஸ்களை முந்தும் போட்டியில் நசுங்கி சின்னபின்னாமான சம்பவம் !

0
full

திருச்சியில் இரண்டு ஆம்னி பஸ்களை முந்தும் போட்டியில் நசுங்கி சின்னபின்னாமான சம்பவம் !

 

திருச்சி கே கே நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் கார் டிரைவரான இவர் 29.11.2019 அதிகாலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நண்பர்கள் நான்கு பேருடன் சென்று கொண்டிருந்தார் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திருவானைக்கோவில் சாலையில் திரும்பும் வழியில் ஓய் ரோட்டில் சென்றபோது முன்னாள் சென்னை சென்ற ஆம்னி பஸ்சை குணசேகரன் முந்தி சென்றார்.

 

அதற்கு முன்னாலும் மற்றொரு ஆம்னி பஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த பஸ்யையும் முந்தி செல்லும் முயற்சியில் காரை ஓட்டிச் சென்றார் இந்தவேளையில் காருக்கு முன்னால் சென்ற ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார்.

 

poster
half 2

இதை சற்றும் எதிர்பாராமல் காரின் வேகத்தை குணசேகரன் குறைத்த நிலையில் பின்னால் வந்த ஆம்னி பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் முன்னால் சென்ற ஆம்னி பிரேக் போட்டு நின்றது இதனால் பஸ்சுக்குள் சொருகியது இதனால் இரண்டு ஆம்னிபஸ் களுக்கும் இடையே சிக்கிய கார் உருக்குலைந்து காருக்குள் சிக்கியவர்கள் அபாய குரல் எழுப்பினர்.

 

ஆம்னி பஸ்சை நிறுத்தி விட்டு பஸ் பயணிகள் காருக்குள் இருக்கும் ஐந்து பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் மேலும் தகவல் அறிந்து திருச்சி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜூ மற்றும் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

அப்போது காரை ஓட்டிய டிரைவர் குணசேகரன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார் அவரது நான்கு பேரும் நண்பர்கள் நான்கு பேரும் பஸ் பின்ன பக்கம் மோதிய போதும் காரின் சீட்டுக்கு அடியில் படுத்துக் கொண்டால் லேசான காயத்துடன் தப்பினர்.

 

கார் உருக்குலைந்து சின்னாபின்னமாகி இருப்பதைப் பார்த்தால் காரில் இருப்பவர்கள்  உயிர் தப்புவது என்பது முடியாத காரியம் என்றும் சரியான நேரத்தில் சமயோஜிதமாக இருக்கைகள் பதுங்கிக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்து இல்லாமல் ஐந்துபேரும் தப்பியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆம்னி பஸ் டிரைவரான வத்தலகுண்டு போய் சார்ந்த ராஜு என்பதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.