திருச்சி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

0

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில்  28ம் தேதி சாலை பாதுகாப்பு  குழுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகரத்திலுள்ள சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாநகராட்சி ஆணையர் சாலைகளில் நடமாடும் கால்நடைகளை பிடித்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க,  என்.எஸ்.பி. சாலையில் தெப்பக்குளம் தென்பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை ஆக்ரமிப்பு கடைகளை உடனடியாக மாநகராட்சி அகற்ற நடவடிக்கை எடுக்க,  வரும் 1ம் தேதிக்குள்  திருச்சி கீழ் அரண் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்ற (1.12.2019) முதல்  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு. அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  அனுமதி வழங்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அவ்வாறின்றி அனுமதி பெற்ற வழித்தடங்களை மீறி வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கினால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க , 108 மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வராமல் வேறு மருத்துவமனைக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதாகவும், உடனே சிகிச்சை அளிக்காமல் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உறவினர் வந்து பணம் செலுத்தும் வரை சிகிச்சை அளிப்பதில்லை என புகார்கள் வருவதால், அரசு மருத்துவமனையில் சேர்க்காத 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள, மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அணுகு சாலையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி- கரூர் சாலையில் Nர் 67 பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலை பிரிவு ரோட்டில் High Mass Light இன்னும்  2 மாத காலத்திற்குள் அமைக்கப்படும்.

திருச்சி-சேலம் (SH 25) No.1 டோல்கேட்டில் சேலம், துறையூர் செல்லும் பேருந்து நிறுத்தத்திலிருந்து உத்தமர் கோவில் மேம்பாலம் வரை பாதசாரிகள் நடந்துசெல்லும் பாதையை கடை வைத்து ஆக்ரமிப்பு செய்துள்ளதால் இந்த இடத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்குழு கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் என்.எஸ்.நிஷா, (சட்டம் மற்றும் ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), ஸ்ரீரங்கம் சார்-ஆட்சியர் சிபி.ஆதித்யாசெந்தில்குமார், முசிறி சார் ஆட்சியர் பத்மஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மு.வடிவேல்பிரபு, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசுப்ரமணியபிள்ளை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.