திருச்சி மாநகராட்சியின் பல்துறை மருத்துவ சேவை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்டு தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன.
அந்த சேவைகளை வலுப்படுத்தும் விதமாக நகர்ப்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை மேலும் வழங்கிடவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பினை கண்டறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி மாநகராட்சிக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்கண்ட 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்,
- இ.பி ரோடு
- எடமலைப்பட்டிபுதூர்
- காட்டூர்
- சுப்பிரமணியபுரம்
- உறையூர்

பல்துறை சிறப்பு மருத்துவ சேவைகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை, குறிப்பிட்ட சிறப்பு மருத்துவரால் மருத்துவ சேவை கீழே குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது.
திங்கள் பொது மருத்துவம் / தோல் மருத்துவம்

செவ்வாய் மகப்பேறு / பல் மருத்துவம்
புதன் குழந்தை நல மருத்துவம் / கண் மருத்துவம்
வியாழன் எலும்பு நோய் மருத்துவம் (Ortho) / இயங்கியல் (Physio)
வெள்ளி பல் மருத்துவம் / காது, மூக்கு, தொண்டைமருத்துவம்
சனி மனநல மருத்துவம்
பொது மக்கள் இந்த சிறப்பு மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கேட்டுக்கொள்கிறார்.
