என் வேலையை மீண்டும் தொடங்குவேன் திருவாரூர் முருகனின் அதிரடி பேட்டி

0

என் வேலையை மீண்டும் தொடங்குவேன் திருவாரூர் முருகனின் அதிரடி பேட்டி

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளைபோனது. திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் தலைமையிலான கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் கொள்ளையன் முருகன் பெங்களூருவில் உள்ள மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் கடந்த மாதம் 11-ந் தேதி சரண் அடைந்தான். முருகனை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி கோரி திருச்சி கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். மேலும் பெங்களூரு கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தனர்.

food

இதைத்தொடர்ந்து திருச்சி போலீசார் தங்களது வழக்கில் விசாரணைக்காக சிறையில் அனுமதி பெற்றனர். மேலும் பெங்களூரு கோர்ட்டிலும் அனுமதி கிடைத்தது.

இதைத்தொடர்ந்து முருகனை அழைத்துக்கொண்டு திருச்சி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று நவ- 27 காலை 11 மணி அளவில் பெங்களூருவில் இருந்து வேனில் புறப்பட்டனர். அப்போது முருகன் வேனில் இருந்து இறங்கி பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அதில் அவர் நான் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர், நான் மீண்டும் வந்து என்னுடைய பணியினை தொடங்குவேன் என்று தைரியமாக பேட்டி அளித்துள்ளார்.

திருச்சி காஜாமலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு நேற்று இரவு 8.30 மணி அளவில் வந்தனர். திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ன் பொறுப்பு மாஜிஸ்திரேட்டான திரிவேணி முன்பு முருகனை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவனை திருச்சி சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் போலீஸ் காவல் விசாரணைக்காக நாளை நவ-27 (அதாவது இன்று) கோர்ட்டில் ஆஜர்படுத்த அறிவுறுத்தினார். இதையடுத்து திருவாரூர் முருகனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் போலீசார் அவனை மீண்டும் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவல் விசாரணைக்காக 14 நாட்கள் அனுமதி கேட்க உள்ளனர். இதில் எத்தனை நாட்கள் அனுமதி கிடைக்கும் என்பது மாஜிஸ்திரேட்டு உத்தரவில் தெரியவரும். அதன்பின் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என்பது தொடர்பாகவும், கொள்ளையில் மீட்கப்பட வேண்டிய மீதமுள்ள 3 கிலோ நகைகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்துவார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என தெரிகிறது. மேலும் நடிகைகளுடன் அவனுக்கு தொடர்பு இருந்தது குறித்தும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.