திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 7 பேர் திடீர் இடமாற்றம்

0
Full Page

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 7 பேர் திடீர் இடமாற்றம்..

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் உள்ளது.

விமானம் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகள், வெளிநாட்டில் இருந்து திருச்சி வரும் பயணிகள் என அனைவரிடமும் மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். திருச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், வெளிநாட்டில் இருந்து ஆமைக்குஞ்சுகள் உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ‘குருவி’கள் போல செயல்பட்டு தங்கம் கடத்தி வந்த பயணிகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு விமான நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Half page

இந்தநிலையில் 2-வது முறையாக கடந்த 5-ந் தேதி இரவு முதல் மறுநாள் 6-ந் தேதிவரை தொடர்ச்சியாக 2 நாட்கள் மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 22 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். மலேசியா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகள், வியாபாரிகள் என 130 பேரிடம் சோதனை நடத்தப்பட்டு 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும்.

இந்த அறிக்கையின் பேரில் சம்மந்தப்பட்ட திருச்சி விமானநிலைய வான்நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம் செய்து திருச்சி சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையா் புல்லேலா நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் வான்நுண்ணறிவு சுங்க உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த உதவி ஆணையா்கள் பண்டராம், ஜெயக்குமாா், ஜெயசந்திரன், கண்காணிப்பாளா்கள் ராஜலிங்கம், ராதா, ரவி, ஆய்வாளா் அகிலா ஆகிய 7 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தங்கம் கடத்தலுக்கு மேலும் சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும், அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்றும் விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.