திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பெற்ற மறுவாழ்வு

கடந்த 23.08.2019 அன்று கரூர் மாவட்டம், தோகமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சிக்குட்பட்ட காவல்காரன்பட்டி EB ஆபீஸ் அருகில் திருச்சி – பாளையம் நெடுஞ்சாலையில் சுமார் 25 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடந்து செல்வதாக அவ்வழியே 100 நாள் வேலையாட்களை பார்வையிட சென்ற வடசேரி ஊராட்சி செயலாளர் கலியராஜ் சாந்திவனம் நிர்வாக செயலாளர் Dr. K. இராமகிருஷ்ணனுக்கு தொலைசேியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் சாந்திவனம் மீட்புக்குழுவினர்களான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், மனநல சமூகப் பணியாளர் பாபு மற்றும் செவிலியர் அனிதா ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பெண்ணை மீட்டு திருச்சி, தில்லைநகரில் உள்ள “ஆத்மா – மனநல மருத்துவமனையில்” மனநல சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில், அப்பெண் தன் பெயர் வனிதா என்றும், தனது ஊர் தஞ்சாவூர் மாவட்டம்,
பாபநாசம் அருகில் உள்ள பட்டி தோப்பு என்றும் தெரிவித்திருந்தார்.


10 நாட்கள் சிகிச்சைக்குப்பிறகு மனநல மறுவாழ்வு பயிற்சிகளுக்காக அப்பெண் சாந்திவனத்திற்கு மாற்றப்பட்டார்.
அங்கு சாந்திவனம் மனநல சமூகப் பணியாளர்கள் மனநல ஆலோசனைகள் வழங்கும் போது
அப்பெண் சிறிது சிறிதாக குணம்பெற்று கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், சமையல் வேலைகளுக்கு உதவுதல் போன்ற வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தார்
அதனடிப்படையில், இன்று 22.11.2019 காலை சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன்
மற்றும் மனநல சமூகப்பணியாளரும், சாந்திவனம் மேலாளருமாகிய பாபு ஆகிய இருவரும் அப்பெண்ணை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகில் உள் ள பசுபதி என்ற கிராமத்தில் உள்ள அவரது தாயார் ராணியிடம் ஒப்படைத்தனர்.
சரியாக மூன்று மாதத்தில் தனது மகளை பூரணமாக குணமாக்கிய ஆத்மா – சாந்திவனம் குடும்பத்தாருக்கு அப்பெண்ணின் தாயார் ராணி, அவருக்கு கயிறு திரிக்கும் வேலை கொடுத்திருக்கும் டேவிட் என்பவரும் நன்றி கூறினர்.
