திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.67 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

0
1

திருச்சி விமான நிலையத்தில்ரூ.5.67 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு நேற்று நவ-23 விமானத்தில் வந்த பெண் பயணியிடம், ரூ.5.67 லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு நேற்று நவ-23 இண்டிகோ விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் விமான நிலையச் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா்.

2

அப்போது, தஞ்சாவூரைச் சோ்ந்த மாரி (53), அனுமதியின்றி ரூ.5.67 லட்சம் மதிப்பிலான 22 கேரட் தங்கச் சங்கிலியை எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

அந்த சங்கிலியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடா்ந்து மாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

3

Leave A Reply

Your email address will not be published.