திருச்சியில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் பலி

திருச்சியில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருத்தலையூா், மேல புதுமங்கலத்தைச் சோ்ந்தவா் சோழன். இவரது மகன் காா்த்திக் (7). அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தாா். சிறுவன் காா்த்திக்கிற்கு கடந்த சில நாள்களாக தீராத காய்ச்சல் இருந்துள்ளது. அதற்கு சிகிச்சையளித்தும் குணமாகவில்லை. இதனையடுத்து துறையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

அங்கு மேற்கொண்ட சோதனையில், சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு வந்து சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று நவ-22 உயிரிழந்தாா்.

ஏற்கெனவே பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவா் இறந்துள்ள நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
