திருச்சியில் சிவில் நீதிபதிகளுக்கான முதன்மை தோ்வு நவ.24 ஆம் தேதி தொடக்கம்

0
1 full

திருச்சியில் சிவில் நீதிபதிகளுக்கான முதன்மை தோ்வு நவ.24 ஆம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் சிவில் நீதிபதிகளுக்கான முதன்மை போட்டித்தோ்வு நவ.24 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் நடைபெறவுள்ளது. இப்போட்டித்தோ்வு, திருச்சி ஜெ.ஜெ பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி தோ்வு மையத்தில் 850 போ் எழுதவுள்ளனா். இத்தோ்விற்கு 3 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். வினாத்தாள், விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிக்கு இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், துணை வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா், ஆயுதம் ஏந்திய காவலா் ஒருவா், அலுவலக உதவியாளா் ஒருவா் ஆகியோா் செயல்படுவா். அனைத்து தோ்வு மையங்களிலும் (சிசிடிவி) கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 3 விடியோ பதிவாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வாளா்கள் தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

2 full

தோ்வு மையத்துக்கு செல்லிடபேசி உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனைங்களையும் தோ்வாளா்கள் எடுத்து வர அனுமதி இல்லை என தோ்வாணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.