தனிமையில் நின்ற இளம் பெண் – பெற்றோரிடம் ஒப்படைத்த திருச்சி போலிஸ்

திருச்சியில் தனிமையில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணினை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு.

திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே நவ – 22 அதிகாலை 4 மணிக்கு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மஞ்சள் நிற உடையுடன் இருப்பதாக தகவலறிந்து ரோந்து பணியில் இருந்த கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர் பாலு, அந்த பெண்ணை மீட்டார். பின்னர் அப்பெண்ணிடம் விசாரிக்கையில் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் மாரிமுத்து மகள் பானு (26) என கூறியுள்ளார். பின்னர் அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து பின்னர் அவருடைய பெற்றோரிடம் விசாரிக்கையில் பானு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அடிக்கடி இதுப்போன்று வந்துவிடுவார் என தெரிவித்துள்ளனர். பின்னர் பானு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் பாலத்தில் தனிமையில் நின்றுக்கொண்டிருந்த காதல் ஜோடிகளிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு காதலன் தண்ணீரில் குதித்து உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறக்கூடாது என திருச்சி காவல்துறையினர் முழு நேரமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்
