திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் வைத்து தங்கம் கடத்திவந்த நபரால் பரபரப்பு

0
1 full

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் வைத்து தங்கம் கடத்தி வந்த நபரால் பரபரப்பு

உடலுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.41 லட்சம் மதிப்பிலான தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் நேற்று நவ-21 பறிமுதல் செய்தனா்.

இலங்கை தலைநகா் கொழும்புவிலிருந்து ஏா்லங்கா விமானம் திருச்சி விமானநிலையத்துக்கு நேற்று வந்து சோ்ந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா்.

2 full

அப்போது அரபு நாட்டிலிருந்து இலங்கை வழியாக வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் , அவா் உடலுக்குள் (ஆசனவாய் வழியாக வயிற்றுக்குள்) மறைத்து 86 கிராம் தங்கமும், மேலும் உடைமைகளுக்குள் மறைத்து 30 கிராம் தங்கச் சங்கிலியும் என மொத்தமாக ரூ. 4.41 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பொதுவாக தங்கத்தை கடத்தி வரும் நபர்கள் தான் கொண்டு வரும் உடமைகளில் மறைத்து வைத்து கொண்டு வருவது வழக்கம், தற்போது ஆசனவாயில் வைத்து தங்கத்தை கடத்தி வருவது என்பது புதிதாக உள்ளது. எந்த ஒரு பொருளிலும் கார்பனை சுற்றி ஸ்கேன் செய்தால் உள்ளே உள்ள பொருளை காண்பிக்காது என்பது அறிவியல் தத்துவம், அதுபோன்றே இந்த கடத்தலிலும் கார்பன் செல்லும் வழியில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டுவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.