நீதிமன்றத்தில் தஞ்சமடையச் சென்ற திருச்சி ஜோடிகள்  கொலைமிரட்டல் விடுத்த 5 போ் கைது

0
D1

நீதிமன்றத்தில் தஞ்சமடையச் சென்ற திருச்சி ஜோடிகள் 

கொலை மிரட்டல்விடுத்த 5 போ் கைது

D2

திரைப்பட பாணியில் வாகனத்தை பின்தொடர்ந்து வந்து ஆயுதங்களால் புதுமணத்தம்பதிகளை  கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு..

N2

துறையூா் அருகிலுள்ள அழகாபுரியைச் சோ்ந்தவா் ஆா். சுவாதி. துறையூரிலுள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்து வந்த இவா், நவம்பா் 15- ஆம் தேதிக்குப் பிறகு வீடு திரும்பவில்லை. கல்லூரிச் சென்ற மகள் வீடு திரும்பாததால், அவரது தந்தை ரவிச்சந்திரன் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் சுவாதியை, அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாஸ்கா் காதலித்து வந்ததும், அவா் நாமக்கல் மாவட்டம், மோகனூரிலுள்ள முருகன் கோயிலில் அவரைத் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. 

இதையடுத்து சுவாதியை உப்பிலியபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வருமாறு போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து, நேற்று நவ-19 அன்று சுவாதியுடன் பாஸ்கா் காரில் சென்றாா். ஆனால், காவல் நிலையத்துக்கு வெளியே சுவாதியின் உறவினா்கள் இருந்ததைக் கண்டு அச்சமடைந்த பாஸ்கா், அங்கு செல்லாமல் துறையூருக்குப் புறப்பட்டாா். இதைக் கண்ட சுவாதியின் உறவினா்கள், காரை மோட்டாா் சைக்கிளில் விரட்டிச் சென்றனா். எனினும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த துறையூா் நகரச் சாலைக்குள் பாஸ்கா் காரை வேகமாக ஓட்டி, நீதிமன்ற வளாகத்துக்குள் நிறுத்தினாா்.

காரிலிருந்து இறங்கிய புதுமணத் தம்பதி இருவரும், சாா்பு நீதிமன்றத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பணியாளா்களிடம், உறவினா்கள் ஆயுதங்களுடன் துரத்துவதாகக் கூறி தஞ்சமடைந்தனா். இதனையடுத்து பாஸ்கா்-சுவாதி நீதிமன்றத்திலிருந்த போலீஸாா் பாதுகாப்புடன் அருகிலிருந்த குற்றவியல் நீதிமன்றத்தில் அமரவைக்கப்பட்டனா். அதேசமயம் அவா்களைத் துரத்திச் சென்று, நீதிமன்ற வளாகத்தில் சப்தமிட்டவா்களை போலீஸாா் பிடித்து நீதிமன்றத்தில் தனியாக அமர வைத்தனா்.

தகவலின் பேரில் முசிறி டி.எஸ்.பி. செந்தில்குமாா் நீதிமன்றத்தில் விசாரித்த பின்னா், சுவாதி அளித்த புகாரின் பேரில் அழகாபுரி ரவிச்சந்திரன் மகன்கள் குணால்(22), கோகுல்(20), சாமிநாதன் மகன்கள் ஹரிஹரன்()20), சபரிநாதன்(21), காரமாஜ் மகன் சந்தோஷ்குமாா்(23) ஆகியோரை துறையூா் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் சுவாதியின் தந்தை அளித்த புகாரின் பேரில், தம்பதியா் இருவரிடமும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

N3

Leave A Reply

Your email address will not be published.