திருச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி பலி

திருச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன்,மனைவி பலி.
காப்பாற்ற சென்ற உறவினர் படுகாயம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகலங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள தாரானூர் கிராமம் வடக்கு தெருவில் வசிக்கும் சுப்பையா மகன் மகேந்திரன்(36) இவருடைய மனைவி சத்யா(30). இவர்களுக்கு சந்தோஷ்(4),சர்வேஸ்(3) என இரு மகன்கள் உள்ளனர்.மகேந் திரனும் அவருடைய அண்ணன் சக்திவேலும் ஒரே வீட்டில் கூட டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.
கூலித் தொழிலாளியான மகேந்திரனும்,அவருடைய மனைவி சத்யாவும் வேலைக்கு சென்றுவிட்டு் வீட்டு வேலைகளை செய்தபோது வீட்டின் சந்து பகுதியில் மின்சாரம் செல்லும் எர்த் ஒயர் பகுதியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனிக்காத சத்யா சந்து பகுதிக்கு சென்ற போது எரத்ஒயர் பட்டு சந்தியா மீது மின்சாரம் தாக்கியது. இதையறிந்து காப்பற்ற சென்ற கணவன் மீதும் மின்சாரம் தாக்கியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் காப்பாற்ற சென்றவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டனர். படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
