திருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி நீதிமன்றம் அதிரடி

0
full

திருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி நீதிமன்றம் அதிரடி

ukr

திருச்சி உறையூர் கீழ சாயபட்டறை தெருவை சேர்ந்தவர் சிவகாமி. இவர் 30/12/ 2015 அன்று காலை தனது வீட்டின் முன் கோலமிட்டு கொண்டிருந்தபோது பின்னே வந்த உறையூர் சின்ன செட்டித் தெருவை சேர்ந்த மோகன்ராஜ்( வயது 30) சிவகாமி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியையும் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் வைரத் தோடையும் பறித்து சென்றார். இதன் மூலம் சிவகாமி உறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட நபரை தேடிப்பிடித்து இன்று 20 /11/ 2019 திருச்சி சிஜேஎம் கோர்ட்டில் நீதியரசர் கிருபாகரன் மதுரம் தலைமையிலான அமர்வில் ஆஜர்படுத்தினர்.

இதில் மோகன்ராஜ் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாலும் உறையூர் மற்றும் திருச்சி மாநகருக்குள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் அந்நபர் மீது பதியப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் கட்ட சொல்லி தெரிவித்தார். மேலும் அவர் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்..

 

half 1

Leave A Reply

Your email address will not be published.