திருச்சியில் கிறிஸ்த குரு பட்டம் படிக்கும் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை !

0
D1

திருச்சியில் கிறிஸ்த குரு பட்டம் படிக்கும் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை !

 

சமீப காலமாக உயிர் பலிகளின் புகழிடமாக கல்வி நிறுவங்கள் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கிறது. சமீபத்தில் திருச்சியில் திருச்சி தாபேட்டையில் உள்ள சவுடாம்பிகா பள்ளியில் படித்த 11ம் வகுப்பு தனப்பிரியா பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையில் விஷம் குடித்து தற்கொலை சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை, திருச்சி கே.கே.நகர் அய்மான் கல்லூரியில் ஜார்கண்ட மாணவி ஜெப்ரான்பர்வீன் தற்கொலை, உறையூர் நர்சிங் கல்லூரியில் சுனித்தா தற்கொலை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மண்ணியல் இரண்டாம் மாணவி ஜெனிபர் என்கிற மாணவி பினாயில் குடித்து தற்கொலை முயற்சி என அடுத்தடுத்த மாணவிகள் மற்றும் மாணவர்கள் தற்கொலை கல்வி நிலையங்களில் நடக்கும் டார்ச்ச தான் என்பதையே உணர்த்துகிறது. தற்போது திருச்சியில் கிறிஸ்தவ குரு பட்டம் படிக்கும் மாணவன் தற்கொலை இன்னும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

N2

D2

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்தவர் பிரசாத் – இவருக்கு வயது 25, இவர் திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே உள்ள தூயபவுல் இறையியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் 19.11.2019 நேற்று மதியம் கல்லூரியில் உள்ள அவரது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கன்டோன்மென் போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

 

இது குறித்து நாம் விசாரிக்கையில் பிரசாத் கிறிஸ்தவ குரு பட்டம் பெறுவதற்காக இங்கு படித்து வந்தாலும், எப்போதும் தனிமையை விரும்பியே இருப்பராம்.  கவிதைகள் எழுதும் பழக்கம் கொண்ட அவர். சமீப காலமாக மரணம் குறித்த கவிதைகள் நிறைய எழுதி இருக்கிறார். தன்னுடைய மரணத்திற்கு காரணம் யாரும் காரணம் இல்லை என்றும் தான் மட்டுமே காரணம் என்று கவிதை வடிவில் கடிதம் எழுதியிருப்பதாக போலிஸ் விசாரணையில் முதல் கட்டமாக தெரிவிக்கின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.