காவேரி மகளிர் கல்லூரியில் பரமார்ஷ் திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்த துவக்க விழா

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பல்கலைக்கழக மானியக்குழுவின் பரமார்ஷ் திட்டத்தின் கீழ் தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் அங்கீகாரத்தையும் தரமான கல்வியை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கல்வி நிறுவனங்களை வழிநடத்தும் நிறுவனமாக காவேரி மகளிர் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த துவக்க விழா காவேரி மகளிர் கல்லூரியில் நேற்று(91ம் தேதி நடந்தது). சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் சுஜாதா வரவேற்றார். கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் நீலகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர் தனது உரையில் உயர்கல்விக்கொள்கையினுடைய நோக்கங்க்ளயும் பரமார்ஷ் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து, அதற்கான வழிகாட்டும் நிறுவனமாக இக்கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் வழிகாட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற கல்லூரிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பல்கலைக்கழக பதிவாளர் அங்கீகாரம் வழங்கி ஒப்படைக்க கல்லூரியினுடைய முதல்வர்கள் பெற்றுக்கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் சிந்து ஜெனிதா பிரகாஷ் நன்றி கூறினார்.
