தொட்டியம் கிளை நூலகருக்கு  டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது

0
D1

தொட்டிம் கிளை நூலகர் வே.செல்வமணிக்கு சிறந்த நூலகருக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது சென்னையில் வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்ட முழுநேர கிளை நூலகத்தில்  நூலகராக பணிபுரிபவர் வே.செல்வமணி(43). இவர் 2005-இல் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் ஊர்ப்புற  நூலகராக பணியில் சேர்ந்தார். பின்னர்  தண்ணீர்ப்பள்ளி, குளித்தலை, கடலூர், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட இடங்களில்  பணிபுரிந்துள்ளார். இவர் 2017-ஆம் ஆண்டு முதல் தொட்டியம் கிளை நூலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சென்னையில் நவம்பர்-14-ல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் செங்கோட்டையனிடம் நூலகர் வே.செல்வமணி சிறந்த நூலகருக்கான டாக்டர்  எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது பெற்றார். மேலும் இவர்  தன் சொந்த இரு சக்கர நூலக வாகனத்தை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் புத்தகங்களை எடுத்துச்சென்றும்   பள்ளிகள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு கொடுத்து வருகிறார். சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநான் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பயிர் மருத்துவம் மற்றும் தொலை மருத்துவம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நூலக வளர்ச்சிக்காக அதிக உறுப்பினர்கள் புரவலர்கள் மற்றும் நன்கொடை  தாளவாட பொருட்களையும்  பெற்றுள்ளார்.

D2
N2

மேலும் வாசகர் வட்டத்துடன் இணைந்து நூலகத்தில் பல்வேறு நூலக சேவைகளை செயல்படுத்தி வருகிறார். தற்போது நூலகத்தை போட்டித்தேர்வுக்கு அதிகமான மாணவர்கள் பயன்படுத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறார். வாசகர்களை கொண்டு திருச்சிமாவட்டத்திலேயே நூலகத்தில் இரண்டாவது குழந்தைகள் பிரிவு உருவாக்கி செயல்படுத்தியுள்ளார். மேலும் எம்.எஸ்.சுவாமிநான் ஆராய்ச்சி மையம் மற்றும்  பில்கேட்ஸ் மிலின்டா பவுண்டேசன் இணைந்து பொது நூலகங்களில்  பணியாற்றும் நூலகர்களுக்கு வழங்கும் பல்வேறு பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் சிங்கப்பூரில் நடைபெற்ற அறிவுசார் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். எம்.எஸ்.சுவாமிநான் ஆராய்ச்சி மையம்  இந்திய அளவிலான   நூலகர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி   இணையவழியில் பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலகர் விருது பெற்றதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக  அலுவலர் அ.பொ.சிவகுமார் மற்றும்  தொட்டியம் வாசகர் வட்ட தலைவர் வரதராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வாசகர்கள் நூலகரை பாரட்டினர்.

நூலகர் கூறியதாவது: “மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் ஊக்கிவிப்பினாலும்  எம்.எஸ்.சுவாமிநான் ஆராய்ச்சி மையத்தின் தொடர் பயிற்சியினாலும்  திறனை வளர்த்துக்கொண்டு சிறப்பாக செயல்பட முடிந்தது. விருது வழங்கி கவுரவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நூலகத்தை கிராமத்தில் உள்ள அனைத்துமக்களும் பயன்படுத்த வைக்க வேண்டும் மற்றும் நூலகத்திற்கு பயன்படக்கூடிய வகையில் ஆக்கப்பூர்வமான  புதுமையான நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்  மற்றும் நூலகத்தை நவீனபடுத்த வேண்டும் என்பதே எனது கனவாகும்” என்றார்.

N3

Leave A Reply

Your email address will not be published.