தொட்டியம் கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா

17.11.2019 அன்று தொட்டியம் கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் மற்றும் சிகரம் சதுரங்கம் அகடமி இணைந்து 52வது தேசிய நூலக வாரவிழாவை கொண்டாடினர். அன்று மாணவர்களுக்கு சதுரங்கப்போட்டியை நடத்தினர்.
போட்டியில் 40 பேர் பங்கேற்றனர். சதுரங்கப் பயிற்சியாளர் தனபால் போட்டியை வழிநடத்தினார். போட்டி ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது.
போட்டியில் பத்து வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் த.சரவணபோஸ் இரண்டாம் இடம் ச.சாஸ்தா யோகிஸ்வர் மூன்றாம் இடம் வே.லசிமா ஆகியோர் பெற்றனர்.

பதினைந்து வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் த.முரளி சேசாத்ரி இரண்டாம் இடம் ர.ராகுல் மூன்றாம் இடம் ச.அமர்தவர்ஷினி ஆகியோர் பெற்றனர்.
அனைத்து வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பி. தீபன்ராஜ் இரண்டாம் இடம் நா.உ.கண்மணி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்
நிகழ்ச்சியில் சுகந்தி அனைவரையும் வரவேற்றார். நூலகர்கள் பாலசுப்ரமணியன் .ராஜா மற்றும் பணியாளர் லலிதா ஆகியார் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தனர். இறுதியில் நூலகர் வே.செல்வமணி நன்றி கூறினார்.
