திருச்சியை திணறவிடும் ஹிந்தி மாலும் திகிலுடன் நைட் ரவுண்ட்ஸ்

0
1

 

திருச்சியை திணறவிடும் ஹிந்தி மாலும் திகிலுடன் நைட் ரவுண்ட்ஸ்…

 

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது…. என்பதைப் போல ஒரு புதிய யுக்தியை கையாண்டு வருகிறது ஒரு கும்பல்.

2

இரவு 11.30 மணி திருச்சி ரயில்வே ஜங்ஷன்லிலிருந்து சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஆட்கள் நடமாட்டம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்து வந்தது. நம் அருகில் இருந்தவர் அவருடைய நண்பரிடம் தலைவா இதுக்கு மேல இங்க நிக்கிறது உனக்கும் நல்லது இல்ல எனக்கும் நல்லது இல்ல வா கிளம்புவோம்…இருடா போவோம் நண்பர் கூற அவர் புலம்பிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரத்தில் ஒரு கும்பல் வெளியூர் செல்லும் பயணிகளிடம் ஹிந்தி மாலும் என்று கேட்டுக்கொண்டே வந்தது. அப்போது குடும்பத்துடன் சென்ற ஒருவரை மறித்து ஹிந்தி மாலும் என்றது அவரும் அதற்கு பதிலளித்தார். அவரிடம் குறைகளை கூறுவதுபோல் அக்கும்பல் கூறி அவரிடம் இருந்து ரூ.500 பெற்றது.

மறுபடியும் அக்கும்பல் அதேவேலையை சுமார் 12 மணி வரைக்கும் பார்த்து வந்தது. இதுதொடர்பாக நம் அருகில் உள்ள நபர்களிடம் விசாரித்த போது அவர் நம்மிடம் தினமும் நைட் ஆகிடிச்சின இதுமாரி 2 சின்ன பசங்க அப்பா, அம்மா மாதிரி ரெண்டுபேரு வந்து இதுமாதிரி ஹிந்தி மாலும்னு தேர்ந்தெடுத்து கேட்பது போல கேக்குறாங்க அவங்களும் ஒன்னும் கேக்கம்மா ஐநூறு ,ஆயிரம்னு கொடுத்துட்டு போறாங்க, தினமும் வந்தவங்க தான் வருவாங்கனு பாத்தா, கூட வர பசங்கல பாத்திங்கனா மாறி மாறி புது ஆள இருக்காங்க… நானும் ஆரம்பத்துல பாலத்துக்கு அடியில தங்கியிருக்குறவங்கனு தான் நெனச்சேன் ஆனா அது அவங்க இல்ல வேற யாருனும் தெரியல..ஆனா அவங்க எல்லாரும் ஹிந்தி பேசுறங்க..என்றார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பல வழிப்பறி கும்பலின் அட்டகாசம் பெருக்கெடுத்து வந்த நிலையில் இப்போது இதுப்போன்ற கும்பல் புதுயுக்தியை கையாண்டு வருகிறது. இக்கும்பல் யாரென காவல்துறை கண்டுக்கொள்ளுமா..

3

Leave A Reply

Your email address will not be published.